1 Crore Campaign

அய்யா விவேக் அவர்களின் எதிர்பாராத இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 1 கோடி மரக்கன்றுகள் நடுவோம் வாருங்கள்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றுவோம்’ என்ற நோக்கில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு ஊர் ஊராகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, மரக்கன்றுகளை நட்டார் நடிகர் விவேக். இவரது விழிப்புணர்வைப் பார்த்து ஏராளமான இளைஞர்கள், லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இதுவரை சுமார் 33.23 லட்ச மரக்கன்றுகளை நட்டுள்ளார். மேலும், கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் இளைஞர்கள், மாணவர்களை சமூக வலைதளங்கள் மூலமும் நேரிலும் பாராட்டியுள்ளார்.

அவரது கனவை நிறைவேற்ற வாருங்கள்