வரலாறு

ஐரோப்பியர்களின் கிழக்குப் பகுதிகளுக்கான புதிய கடல்வழித்தடங்களை கண்டுபிடித்தல் – இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகை

துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் ஐரோப்பிய கடல்சார்கண்டுபிடிப்பு நாடுகளை கிழக்கத்திய நாடுகளுக்கு புதிய கடல்வழிகளைக் கண்டுபிடிக்க உத்வேகத்தையளித்தது. எனவே, அந்நாடுகள் உதுமானியர்களால் (ஆட்டோமன்கள்) கட்டுப்படுத்தப்பட்ட பழைய கடல் வழித்தடங்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. இந்த முயற்சிகள் மூலம் புதிய புவியியல் கண்டுபிடிப்புகளையும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் புதிய உலகம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஐரோப்பியர்கள் அறியவந்தனர்.   கடல் ஆய்வுக்கு வழிவகுக்கும் பல காரணிகள் (அ)  சிலுவைப்போர்களின் போது போர்வீரர்கள் கிழக்கத்திய நாடுகளிலிருந்து பெரும் அளவில் பொருட்களை எடுத்துவந்தனர். மேற்கத்திய […]