திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 8 அன்புடைமை

ஒருவர் அன்பானவராக இருந்தால், அவரால் இரக்கத்தை மறைக்க முடியாது. கண்களில் கண்ணிர் வழியும். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் தன் உயிரையும் அடுத்தவற்குத் தரவல்லவராகவும், அடுத்தவருடன் ஒத்திசைவுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள். இன்பமுடனும், அறம் காக்கும் பண்புடனும், உண்மையான உயிர் வாழ்தல் என்ற சிறப்புடனும் இருப்பார்கள். 1) அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். 2) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 3) அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. […]