UG degree

அரசு பணியில் சேர என்ன படிக்கலாம்?

பெரும்பாலும் பெற்றோர்களும், மாணவர்களும் படிப்பு சம்மந்தமாக ஆலோசனை கேட்பது, இஞ்சினியரிங்கில் என்ன படிப்பது ?, மெடிக்கல்ல என்ன படிப்பது ?, B.Com முடித்தால் வேலை கிடைக்குமா ? என்பதுதான். இந்தியாவையே இயக்கும் அரசு வேலைகளில் சேர என்ன படிப்பது என பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை. என்ன படித்தால் வேலை கிடைக்கும் என ஆய்வு செய்யும் மாணவர்களே, இந்திய அரசாங்கத்தில் 2.15 கோடி வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை உங்கள் ஆய்வில் சேர்க்க மறந்து விட்டீர்கள், நன்றாக படித்தாலும், சுமாராக படித்தாலும், சுத்தமாக படிப்பே வரவில்லை என்றாலும் தகுதிக்கு ஏற்ப மத்திய , மாநில அரசுகளில் பல்வேறு வேலைகள் உள்ளன. வெளிநாடுகளில் போய் கஷ்ட்டப்பட்டு வாழ்கை நடத்துவதற்க்கு அரசு வேலை எவ்வளோ மேல்.

அரசு வேலை கொடுத்தால் நாங்கள் என்ன வேண்டாம் என்றா சொல்கின்றோம் என மாணவர்கள் நினைப்பது புரிகின்றது, எந்த ஒரு வேலையும் தானாக வந்து சேராது, அதற்கான வழிமுறையை தெரிந்து முறையான பயிற்சி எடுத்து அரசு வேலைக்கு விண்ணப்பித்தால் நிச்சயம் அரசு வேலை கிடைக்கும். அதற்காக வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் மட்டுமே வெற்றியை தந்துவிடாது, விடா முயற்ச்சியும், கடின உழைப்பு மாணவர்களாகிய உங்களை சேர்ந்தது.
நேர்மையான முறையில் அரசு வேலையில் சேர போட்டி தேர்வுகளில் தேர்சி பெறுவதே சிறந்தது. மத்திய அரசு உயர் பதவியில் (IAS, IPS உட்பட ) சேர UPSC பல தேர்வுகளை நடத்துகின்றது. இதில் தேர்சி பெறுவதன் மூலம் இந்திய அரசயே இயக்கும் பதவிகளில் அமர முடியும், தமிழகத்தில் TNPSC பல்வேறு தேர்வுகளை நடத்துகின்றது, இதில் தேர்சி பெறுவதன் மூலம் தமிழகத்தில் அரசு பதவியில் அமர முடியும். அரசு வேலையில் சேர்வதென்பது போட்டி தேர்வில் வெற்றி பெறுவதுதான். எனவே மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்க்கு வசதியான படிப்புகளை தேர்ந்தெடுக்கவும்.

அரசு வேலை பெற தகுதிகள் :

8 – ஆம் வகுப்பு முதல் பட்ட படிப்பு வரை படித்தவர்களுக்கு மத்திய மாநில அரசு பணியில் வேலைகள் உள்ளன. இருந்தாலும் கண்டிப்பாக பட்ட படிப்பு படிப்பது நல்லது. எனவே மாணவர்கள் பட்ட படிப்பு முடித்து அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணம் வையுங்கள்.
எளிதில் நினைவில் நிறுத்திகொள்ளும் திறன், குறிப்புகளை கொண்டு விடையை தேர்ந்தெடுக்கும் திறன், கவனதை சிதரவிடாமல் ஆழ்ந்து படிக்கும் திறன் ஆகியவை போட்டி தேர்வில் வெற்றி பெற உதவும். சில பணியிடங்களுக்கு நேர்முக தேர்வும் இருப்பதால், ஆங்கில பேச்சாற்றலை வளர்த்து கொள்வதும் சிறந்தது.

அரசு வேலையில் சேர என்ன படிக்கலாம் ?

+2 முடித்த பிறகு எளிதான பட்ட படிப்பில் சேரவும், உதாரணத்திற்க்கு B.A (Economics) , B.A (history) , B.Sc (psychology) , BBA, B.Sc (physics) , B.A (English) போன்ற படிப்புகளில் சேரலாம். இந்த கலை / அறிவியல் படிப்புகள் பாதி நாள் தான் பயிற்றுவிக்கப்படும், அதாவது மதியமே கல்லூரி முடிந்துவிடும், மதியத்திற்க்கு மேல் மாணவர்கள் அரசு போட்டி தேர்விற்க்கு தங்களை தயார் படுத்தி கொள்ள நேரம் கிடைக்கும்.

மாணவர்கள் பட்ட படிப்பு படிக்கும் காலத்தில் இரண்டு விதமான கல்வி பயில வேண்டும், நாம் படிக்கும் பட்ட படிப்பிற்க்கான பாடங்களை படிக்க வேண்டும், அதே நேரத்தில் அரசு போட்டி தேர்விற்க்கும் படிக்க வேண்டும். எனவே எளிதான பட்ட படிப்பு படிப்பதன் மூலம் நமக்கு நேரம் அதிகமாக கிடைக்கும், அந்த நேரத்தில் போட்டி தேர்விற்க்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளளாம். பொறியியல் போன்ற படிப்புகள் படித்தால் பெருபாலான நேரம் பொறியியல் பாடங்கள் படிக்கவே செலவாகிவிடும் எனவே போட்டி தேர்விற்க்கு படிக்க நேரம் கிடைக்காது. அரசு வேலைதான் இலட்சியம் என கருதும் மாணவர்கள் எளிதான கலை / அறிவியல் படிப்புகளை தேர்ந்தெடுக்கவும். கல்லூரி படிப்பில் இரண்டாம் ஆண்டு துவக்கத்திலிருந்தே மாணவர்கள் போட்டி தேர்விற்க்கு தயாராக வேண்டும்.

இறுதி ஆண்டு படிக்கும் போதே மத்திய அரசின் UPSC (www.upsc.gov.in) இணையதளத்தில் வெளியாகும் அரசு பணிக்கான போட்டி தேர்விற்க்கு விண்ணப்பிக்கவும், அதே போல் தமிழக அரசின் TNPSC (www.tnpsc.gov.in) இணையதளத்தில் வெளியாகும் அரசு பணிக்கான போட்டி தேர்விற்க்கும் விண்ணப்பிக்கவும், இந்த இரண்டு இணையதளங்களையுன் தொடர்ந்து கவனித்து வரவும். UPSC தவிர இரயில்வேயில் சேர RRB (www.rrbchennai.gov.in) சில நுழைவு தேர்வுகளை நடத்துகின்றது. இராணுவத்தில் சேர தனியாக விண்ணப்பிக்க வேண்டும். http://joinindianarmy.nic.in இணையதளத்தில் இதற்க்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவரும்
ஒரு குறிபிட்ட போட்டி தேர்விற்க்கு தயாராகாமல் எல்லா தேர்வுகளுக்கும் தயார் படித்தி கொள்ளுங்கள். ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேரலாம்.

போட்டி தேர்வில் வெல்வது எப்படி ?

அரசு வேலைக்கான போட்டி தேர்வுகள் வருடா வருடம் நடத்தபடும் தேர்வுகளாகும். எனவே கடந்த ஆண்டுகளில் கேட்க்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பை பார்த்தாலே எப்படிபட்ட கேள்விகள் கேட்க்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அதற்க்கு ஏற்றார் போல மாணவர்கள் தங்களை தயார் படுத்தி கொள்ளாம், பெரும்பாலும் எல்லா போட்டி தேர்வுகளுக்கும் படிக்க புத்தங்கள் கிடைக்கின்றன அவைகளை வாங்கி படித்து , அதில் உள்ள மாதிரி வினாக்களுக்கு விடை அளிக்க முயற்சி செய்யலாம்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதற்க்காக பயிற்சி மைய்யங்கள் உள்ளன , அதில் சேர்ந்தும் படிக்கலாம். சில பயிற்சி மைய்யங்கள் இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றன. அதையும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்க்கான பொதுவான வழிமுறைகளை பார்ப்போம் :

நம்பிக்கை :

போட்டி தேர்வுகள் என்றாலே மிகவும் கடினம், தேர்ச்சி பெற இயலாது, போட்டி கடுமையாக இருக்கும் என நாம் நினைப்பது தான் நம்மை போட்டி தேர்வுகளை எழுதாமால் தடுக்கின்றது. நம்மால் தேர்ச்சி பெற இயலாது என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க உங்கள் மீது நம்பிக்கை வைத்து , கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் இலக்கை அடைய முடியும்.

ஆர்வம்

எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது, பொதுவாக ” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.

படித்தது மறக்காமல் இருக்க : மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வு எழுதும் போது எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். பொதுவாக இதை மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. படிக்கும் போது கவனமாக படியுங்கள், யாரிடமும் பேசாதீர்கள், இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள். இப்படி செய்தால் படித்தது நிச்சயம் நினைவில் இருக்கும்.

பொதுவாக நாம் தேர்விற்க்காக படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்க்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.

கடின உழைப்பு :

1. அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயச்சிக்க வேண்டும், போட்டி தேர்விற்க்கான புத்தகம் சரியில்லை, கோசிங் சென்டர் சரி இல்லை, குடும்ப சூழ்நிலை சரி இல்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த சூழ்நிலையில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.

2. படிப்பதை தள்ளிபோடாதீர்கள் : படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.

3. திட்டமிடுதல் : எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் படித்ததை நினைவில் நிருத்த (Revise பன்ன) செலவு செய்ய வேண்டும்.

4. சுயபரிசோதனை (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்ட மிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன் இன்று நாம் திட்ட மிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய (Check List) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *