வரலாறு

ஐரோப்பியர்களின் கிழக்குப் பகுதிகளுக்கான புதிய கடல்வழித்தடங்களை கண்டுபிடித்தல் – இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகை

துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் ஐரோப்பிய கடல்சார்கண்டுபிடிப்பு நாடுகளை கிழக்கத்திய நாடுகளுக்கு புதிய கடல்வழிகளைக் கண்டுபிடிக்க உத்வேகத்தையளித்தது. எனவே, அந்நாடுகள் உதுமானியர்களால் (ஆட்டோமன்கள்) கட்டுப்படுத்தப்பட்ட பழைய கடல் வழித்தடங்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. இந்த முயற்சிகள் மூலம் புதிய புவியியல் கண்டுபிடிப்புகளையும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் புதிய உலகம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஐரோப்பியர்கள் அறியவந்தனர்.   கடல் ஆய்வுக்கு வழிவகுக்கும் பல காரணிகள் (அ)  சிலுவைப்போர்களின் போது போர்வீரர்கள் கிழக்கத்திய நாடுகளிலிருந்து பெரும் அளவில் பொருட்களை எடுத்துவந்தனர். மேற்கத்திய […]

வரலாறு

இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் மேற்கு ஐரோப்பியாவில் அதன் பரவலும்

மறுமலர்ச்சியின் முக்கியத்துவம் லத்தீன் மூலத்தில் இருந்து உருவான மறுமலர்ச்சி (Renaissance) என்ற வார்த்தையின் பொருள் மறுபிறப்பு அல்லது புத்துயிர்ப்பு என்பதாகும். இது கிரேக்க மற்றும் ரோமானிய பகுதிகளில் செம்மொழிகளைக் கற்றல் தொடர்பாக திடீரென எழுந்த ஆர்வத்தை குறிப்பதாக அமைகிறது. எனினும் இந்த வளர்ச்சியின் போக்கில் மறுமலர்ச்சி என்பது பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய செவ்வியல் இலக்கியங்களைக் கற்றல் என்பது மட்டுமல்லாமல் அதனை புத்துயிர்ப்பு பெறச்செய்வதாகவும் இருந்தது. அது கலை, இலக்கியம், அறிவியல், தத்துவம், கல்வி, சமயம் மற்றும் […]

வரலாறு

இந்தியாவில் வேளாண்மை வளர்ச்சி – பசுமை புரட்சி, ஊரக வளர்ச்சி திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்

பசுமைப் புரட்சி 1960களின் இடைப்பகுதியில் இந்தியாவில் உணவு உற்பத்தியின் நிலை மிகவும் கவலையளிப்பதாக இருந்தது. உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நாடு மிகப்பெருமளவில் செலவு செய்தது.நிலச்சீர்திருத்தங்கள்விவசாய உற்பத்தியின் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆகவே அரசு வேளாண்மையைமேம்படுத்த தொழில்நுட்பம் எனும் மாற்று வழிகளை நாடின. 1965இல் நீர்ப்பாசன வசதியுள்ள சிலதேர்ந்தெடுக்கப் பகுதிகளில் அதிக மகசூலைத் தருகிற (உயர்ரக வீரிய வித்துகள் – HYV) கோதுமை, நெல்ஆகியன பயிரிடப்பட்டன.மரபுசார்ந்த விவசாயத்தைப் போலல்லாமல்,அதிக மகசூலைத் தருகிற விதை ரகங்களுக்குஅதிக நீரும் […]

வரலாறு

சுதந்திர இந்தியாவில் நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு நடைமுறை – நில உச்சவரம்பு சட்டம், குத்தகை முறை, பூமிதான இயக்கம்

நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு இந்திய அரசியலமைப்பின்படி வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக நிலச்சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியாக வேண்டும். இவ்வாறு நிலச்சீர்திருத்தத்தின் அடிப்படை வடிவம் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருந்தாலும், சில குறிப்பிட்ட வகைகள் சார்ந்த நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்படுவதில் மாநிலங்களிடையே ஒரே சீரான தன்மையில்லை. ஜமீன்தாரிமுறை ஒழிப்பு நாடு விடுதலை பெறுவதற்கு முன்னரே,ஜமீன்தாரிமுறை ஒழிப்பு இந்திய தேசிய காங்கிரசினுடைய அறிக்கையின் ஒரு பகுதியாக இடம் பெற்றிருந்தது. […]

வரலாறு

வேதகாலம் – வேதகால இந்தியாவின் வரலாறு – Vedic Age

வேதகாலம் வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது வேதகாலம் பற்றிய காணொளி https://youtu.be/WH074aqMXXE வேதகால இந்தியாவின் வரலாறு

வரலாறு

இடைக்கால இந்தியாவில் கல்வி முறை – சமச்சீர் பாடத்திட்டம் – Free Study Material

இடைக்கால இந்தியாவில் கல்வி இந்தியத் துணைக்கண்டத்தில் இஸ்லாமிய கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இடைக்காலம் ஒரு மாற்றத்தைக் கண்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்த படையெடுப்பாளர்களாலும் வணிகர்களாலும் நாடு தாக்குதலுக்குள்ளானது.வணிகர்களும் படையெடுப்பாளர்களும் தங்களது கலாச்சாரங்களை இந்நாட்டு மக்களுடன் ஒன்றிணைத்தனர். அவற்றைத் தவிர சமயம், சமூகம், பண்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றில் இடைக்கால இந்தியா ஒரு புதியகண்ணோட்டதை அடைந்தது. முஸ்லிம்களின் ஆட்சி காலத்தில் (இடைக்காலம்) அறிவின் ஒளியூட்டமும், விரிவாக்கமும் கல்வியின் நோக்கமாக இருந்தன. பதினோறாம் நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தொடக்க மற்றும் […]

வரலாறு

பண்டைய கால இந்தியாவின் கல்விமுறை – சமச்சீர் பாடத்திட்டம் – Free Online Studymaterial

தொடக்க காலத்திலிருந்தே பாரம்பரியமாக கற்றல் மற்றும் கற்பித்தல் இந்தியாவில் நடைமுறையில் இருந்ததாக, வரலாற்று ஆதாரங்கள் நமக்கு தகவல்களை வழங்குகின்றன. வேதம் (Veda) என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அறிவு என்று பொருள். இச்சொல்லானது “வித்” என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் ‘அறிதல்’ என்பதாகும். நமது பண்டைய கல்வி முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவானது. இது தனிநபரின் உள்ளார்ந்த மற்றும் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம், அவரின் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. இக்கல்வியானது பணிவு, உண்மை, […]