திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 9 விருந்தோம்பல்

விவசாயத்தை தொழிலாகக் கொண்டதால் விருந்து என்பது தோன்றியது. உயிர் காக்கும் மருந்தாக இருப்பினும், அதை விருந்துடன் பகிர்ந்துகொள்வதே சிறப்பானது. விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஒருபோதும் ஆட்படமாட்டார். வேள்வியைவிட சிறந்த விருந்தோம்பலே மேன்மையானது.

1) இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
2) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று.
3) வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
4) அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஒம்புவான் இல்.
5) வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
6) செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
7) இணைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
8) பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
9) உடைமைபுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
10) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

பொருள் விளக்கம்

1) இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

இருப்பதை வைத்து இல்வாழ்க்கை வாழ்வது, விருந்து கொடுப்பது போன்றவை விவசாயம் செய்பவர்களின் பொருட்டே வந்தவை.

2) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று.

சாகா மருந்தாக இருப்பினும், விருந்தினர் இருக்க தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கதல்ல.

3) வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

ஒவ்வொரு காலையும் விருந்தினரை எதிர்பார்ப்பவரின் வாழ்க்கை, பருவகால மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை.

4) அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து

நல்விருந்து ஒம்புவான் இல்.

முகமலர்ச்சியுடன் விருந்தினரைக் கவனிப்பவர்களை, உள்ளுக்குள் இருந்து செயல்படா விடாமல் தடுக்கும் சோம்பல் ஒருபோதும் அணுகாது.

5) வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

விருந்தினர்க்கு விருந்து படைத்து, மீதம் இருப்பதை மகிழ்வுடன் உண்பவர், தன் நிலத்தில் விதைக்கத் தேவையே ஏற்படாமல், அந்நிலம் தானாகவே விளையும்.

6) செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

விருந்தினரை உபசரித்து, அடுத்து வரும் விருத்தினருக்காகக் காத்திருப்பவரை தெய்வீகமானவர்களும் ஆசீர்வதிப்பார்கள்.

7) இணைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தினரை உபசரிப்பவருக்கு அந்த விருந்தோம்பலே வேள்விப் பயன்போல் துணையாக இருக்கும். வேறு துணையே தேவையில்லை.

8) பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

விருந்தினரை உபசரித்து அதன் பயனை அடைய விரும்பாதவர்கள், நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று பின்னர் வருந்துவார்கள்.

9) உடைமைபுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

விருந்தினரை உபசரிப்பதைப்போல் வேறு பேறு எதுவும் இல்லை. சிறுபுத்தி உள்ளவர்களிடம்தான் விருந்தினரை உபசரிக்கும் மடமை இருக்கும்.

10) மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

முகர்ந்தாலே வாடிவிடும் அனிச்ச மலர்போல், இன்முகம் காட்டி உபசரிக்காத விருந்து வீணாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *