வரலாறு

இடைக்கால இந்தியாவில் கல்வி முறை – சமச்சீர் பாடத்திட்டம் – Free Study Material

இடைக்கால இந்தியாவில் கல்வி
இந்தியத் துணைக்கண்டத்தில் இஸ்லாமிய கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம் இடைக்காலம் ஒரு மாற்றத்தைக் கண்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்த படையெடுப்பாளர்களாலும் வணிகர்களாலும் நாடு தாக்குதலுக்குள்ளானது.வணிகர்களும் படையெடுப்பாளர்களும் தங்களது கலாச்சாரங்களை இந்நாட்டு மக்களுடன் ஒன்றிணைத்தனர். அவற்றைத் தவிர சமயம், சமூகம், பண்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றில் இடைக்கால இந்தியா ஒரு புதிய
கண்ணோட்டதை அடைந்தது. முஸ்லிம்களின் ஆட்சி காலத்தில் (இடைக்காலம்) அறிவின் ஒளியூட்டமும், விரிவாக்கமும் கல்வியின் நோக்கமாக இருந்தன. பதினோறாம் நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சியாளர்கள் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளை நிறுவினர். அக்காலத்தில் இந்திய இஸ்லாமிய
பாரம்பரியங்களுக்கிடையே ஒரு சிறந்த தொடர்பு இருந்ததால் இறையியல், சமயம்,தத்துவம், நுண்கலை, ஓவியம்,கட்டடக்கலை,கணிதம், மருத்துவம் மற்றும் வானியல் ஆகிய
துறைகள் ஒரு புதிய கோணத்தில் மேம்பாடு அடைந்தன. இருப்பினும், முஸ்லிம்கள் வருகைக்கு முன்னரே இந்தியாவில் ஒரு மேம்பட்ட கல்விமுறை நடைமுறையில் இருந்தது.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் நூலகங்கள் மற்றும் இலக்கிய சங்கங்களை ஏற்படுத்தி நகர்ப்புற கல்வியை ஊக்குவித்தனர். அவர்கள் நிறுவிய
தொடக்கப்பள்ளிகள் மூலம்(மக்தப்-Maktab)மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை இஸ்லாமிய வழிபாட்டு முறைகளை கற்றனர். மேம்பட்ட மொழித்திறன்களை கற்பிக்க இடைநிலைப் பள்ளிகள் (மதரசா-
Madrasa) நிறுவப்பட்டன. சுல்தான்கள்
மற்றும் பிரபுக்களால் பல மதரசாக்கள்
அமைக்கப்பட்டன. மதரசாக்களின் முக்கிய நோக்கம், தகுதியான அறிஞர்களுக்கு குடிமைப் பணிக்கான பயிற்சி அளிப்பதும்,கல்வி அளிப்பதுமே ஆகும். டெல்லியில் ஒரு மதரசாவை நிறுவிய முதல் ஆட்சியாளர் இல்துத்மிஷ் ஆவார். காலப்போக்கில் பல மதரசாக்கள் உருவாயின.

இடைக்கால இந்தியாவில் கல்விமுறையானது உலோமாவின்லகட்டுப்பாட்டில் இருந்தது. அந்தக் காலங்களில்,

கல்வியானது சமயம் சார்ந்த பயிற்சியுடன் தொடர்புடையதாக இருந்தது.இருப்பினும்,மருத்துவம், அரபு இலக்கியம், இலக்கணம் மற்றும் தத்துவம் போன்ற பல்வேறு வகையான பாடங்களும் கற்பிக்கப்பட்டன.இடைக்காலம் மற்றும் நவீன கால முற்பகுதியில் அரபு மற்றும் மத்திய ஆசிய மக்கள் இஸ்லாமிய அடிப்படையிலான கல்வி முறைகளைக் கொண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இடைக்கால இந்தியாவில் பெண் கல்வி பரவலாகக் காணப்பட்டது.ஜெய்பூரைச் சேர்ந்த ராஜா ஜெய்சிங்,அறிவியல் பாடங்களின் கற்றலை ஊக்குவித்தார்.இதைத்தவிர மேலும், பல கல்வி நிறுவனங்கள் தனிநபர்களாலும் தொடங்கப்பட்டன.
டெல்லியில் உள்ள கியாசுதீன் மதரசா மற்றும் ஷாஜகானாபாத்தில் உள்ள மௌலானா சத்ருதீன் மதரசா ஆகியன இம்முறையில் உருவான நிறுவனங்களே ஆகும்


இடைக்காலத்தின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்கள், இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தினர். ஐரோப்பிய சமயப்பரப்பு குழுவினரின் வருகையினால், இந்தியாவில் மேற்கத்திய கல்வி நிலையான முன்னேற்றத்தை அடைந்தது.எண்ணற்ற பல்கலைக்கழகங்களும் ஆயிரக்கணக்கான கல்லூரிகளும் அமைக்கப்பட்டதால், கல்வி வளர்ச்சியடைந்தது.

நவீன கல்வி முறை

ஐரோப்பிய குடியேற்றத்தை தொடர்ந்து சமயப்பரப்பு குழுவினரின் வருகையினால் இந்தியாவில் நவீன கல்வி முறை தொடங்கியது எனலாம். அவர்களது முயற்சியின் விளைவாக இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிறுவனங்கள் மேற்கத்திய கல்வியையும் , இந்தியக் கல்வியையும் பயிற்றுவித்தனர்.

கிறித்துவ சைவபரப்பு குழுவின் பங்கு

வணி்கம் செய்வதற்காக வந்த ஐரோப்பியர்கள், இந்தியாவில் வர்த்தக நிறுவனங்களை நிறுவினர். அவர்கள் நிலங்களை பெற்று கோட்டைகளை கட்டினர். பின்னர், அவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் , சமயத்தையும் இந்திய மக்களிடையே பரப்ப விரும்பினர். உள்ளூர்  மக்களுக்கு ஏற்றவாறு கல்வி வழங்கினால்தான் நிர்வாகத்தையும், சமயக் கருத்துகளையும் நன்கு புரிந்து கொள்வார்கள் என்று கருதி அவர்கள் கல்வி நிறுவனங்களை தொடங்கினர். இந்தியாவில் நவீன கல்வி முறையை தொடங்கியத முதல் ஐரோப்பியர்கள் போர்ச்சுகீசியர்களே ஆவர். இயேசு சங்கத்தின் உறுப்பினரான பிரான்சிஸ் சேவியர் கொச்சியில் ஒரு பல்கலைக் கழகத்தை தொடங்கினார். மேலும் பல தொடக்க பள்ளிகளும் தொடங்கபட்டது. 1575ஆம் ஆண்டு  கோவாவில் தொடங்கபட்ட முதல் கல்லூரியில், கிறித்துவம், தர்க்கம் ,  இலக்கணம் மற்றும் இசை ஆகியன கற்பிக்கப்பட்டு பட்டங்கள் வழங்கப்பட்டது . ஜான் கிர்னாண்டர் என்பவர் ஆர்வமுள்ள முன்னோடிகளில்  ஒருவராக இருந்தார் . அவரின் இவாஞ்சிலிஸ்டிக் அமைப்பானது கிறித்தவர் அல்லாத குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்திய முதல் சமயப்பரப்பு அமைப்பாகும். 1812ஆம் ஆண்டு டாக்டர் C.S. ஜான் என்பவர் தரங்கம்பாடியில் 20 இலவச இசை பள்ளிகளை நிறுவினார். போர்ச்சுகீசியர்களை  தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்களும் இந்தியர்களுக்கான கல்வி நிறுவனங்களைத் துவங்கினர். அங்கு இந்திய ஆசிரியர்களை கொண்டு வட்டார மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது.மேல்நிலைபள்ளிகள் துவங்கபட்டு , அங்கு பிரெஞ்சு மொழிகள் கற்பிக்கப்பட்டன. இரண்டு ஜெர்மன் பிஷப்புகளான சீ்கன்பால்கு மற்றும் புளுட்ச்சா ஆகி்யார் திருவிதாங்கூரில் பள்ளி்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கல்லூரியை தொடங்கினர். கி.பி.1600இல் ஆஙகில கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்கு பின்னர் ஆங்கிலக் கல்வி வழங்குவதற்காக கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன.படிப்படியாக மதராஸ் மற்றும் பனாரஸ் ஆகிய இடங்களில் சமஸ்கிருத கல்லூரி்கள் துவங்கப்பட்டது . கல்கத்தாவின் முதல் பேராசிரியரான டாக்டர் மிடில்டன் என்பவர் ஒரு மிஷினரி கல்லூரியை கல்கத்தாவில் தொடங்கினார். பின்னர் இது பிஷப் கல்லூரி என்று அழைக்கப்பட்டது. மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன் என்பவர் தான் வட்டார மொழிக் கல்வியினை தீவிரமாக முன்மொழிந்தார். ஆனால் 1827இல் அவர் ஓய்வு பெற்ற பின், அவரது ஆர்வலர்கள் நிதி சேகரித்து ஆங்கில கல்வியினை வழங்கும் கல்லூரியை பம்பாயில் நிறுவினர். அது பின்னர் எல்பின்ஸ்டன் கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. இந்தியாவில் கல்வி பரப்புவதற்கு , சமயப்பரப்பு குழுவினர் நன்கு முயன்றனர். அவர்களின் முயற்சியால் பல கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்நிறுவனங்கள் மேற்கத்திய கல்வியியையும்  இந்தியக் கல்வியையும் வழஙகின.

ஆங்கிலேயரின் ஆட்சியில் கல்வி

ஆங்கி்லயர் ஆட்சி காலத்தில் இந்திய கல்வியின் வரலாற்றை நாம் நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம்.

(i) ஆங்கி்லயர் ஆட்சியின் ஆரம்பம் முதல் 1813 வரையிலான காலம்
(ii) 1813 முதல் 1853 வரையிலான காலம்
(iii) 1854 முதல் 1920 வரையிலான காலம்
(iv) 1921 முதல் 1947 வரையிலான காலம்


தொடக்க காலங்களில், ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி கல்வியில் அலட்சியம் மற்றும் குறுக்கீடு இன்மை என்ற கொள்கையைப் பின்பற்றியது. ஏனெனில் கல்வியானது அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. கிழக்கிந்திய கம்பெனியின் 1813ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டம், இந்தியர்களின் கல்விக்கான பொறுப்பை மிகக் குறைந்த அளவில் ஏற்கும்படி கட்டாயப்படுத்தியது. சமயப்பரப்புக் குழுவினரைத் தவிர, வங்காளத்தைச் சேர்ந்த இராஜா ராம்மோகன்ராய், மதராஸின் பச்சையப்பர், டெல்லியைச் சேர்ந்த பிரேசர் போன்ற சமயப்பரப்புக்குழு அல்லாதவர்களும் கல்விக்காக தங்களின் பங்களிப்பைச் செய்தனர்.

இரண்டாவது கட்டமானது கல்விக் கொள்கை, பயிற்றுமொழி, கல்வியைப் பரப்பும் முறை ஆகிய பிரச்சனைகளில் மிகப்பெரிய கருத்து வேறுபாடுகள் கொண்ட காலமாக கருதப்பட்டது. முதலாவது பிரிவினரான கீழ்திசைவாதிகள் கீழ்திசை மொழிகளைப் பாதுகாக்கவும், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழிகளை பயிற்று மொழியாக்கவும் விரும்பினர். இரண்டாவது பிரிவினரான ஆங்கிலசார்பு கோட்பாடுவாதிகள் ஆங்கில மொழி மூலம் மேற்கத்திய அறிவை பரப்புவதை ஆதரித்தனர். அவர்கள் கீழ்திசைவாதிகளின் கொள்கைகளை எதிர்த்தனர். மூன்றாவது பிரிவினர், பயிற்று மொழியாக இந்திய மொழிகளைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். இந்த கருத்து வேறுபாடுகள் 1835 ஆம் ஆண்டின் மெக்காலே-வின் குறிப்பினால் ஓரளவு ஓய்ந்தது. உயர் கல்வியில் கீழ்த்திசை மொழியைத் தவிர்த்து, ஆங்கிலக் கல்வியானது உயர் வகுப்பினருக்காக ஊக்கப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு மாகாணமும் அதற்கேற்ற கல்விக்கொள்கையை ப் பி ன்பற்ற அனுமதி க்கப்பட்டன . இருந்த போதிலும், 1854 ஆம் ஆண்டு வரை இந்த கருத்து வேறுபாடுகள் தொடர்ந்தன. ஆ ங் கி லே ய ரி ன் செல்வாக்கு மிக்க கல்வியின் மூன்றாம் கட்டத்தை அகில இந்தியக் கல்விக் கொள்கையின் காலம் என்றும் அழைக்கலாம். இது 1854ஆம் ஆண்டு சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கையுடன் தொடங்குகிறது. 1882ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஹண்டர் கல்விக்குழு தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது.நான்காவது காலக்கட்டம் மாகாணங்களின் சுயாட்சிக் காலமாகும். 1935 ஆம் ஆண்டுச் சட்டம் நாடு முழுவதும் கல்வியின் முன்னேற்றத்திற்கான புதிய சகாப்தத்தை உருவாக்கியது. 1929ஆம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார பெருமந்தத்தால் புதிய திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் முழுமையான மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தி, மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப்பின் கல்வி மேம்பாட்டிற்கான மிக முக்கியமான திட்டமான சார்ஜண்ட் அறிக்கை (1944) தயாரிக்கப்பட்டது. இக்கல்விக் கொள்கை சமகால கல்வியின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *