திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 1 கடவுள் வாழ்த்து

பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள். அறநூல்களில் ‘உலகப் பொது மறை‘ என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் திருக்குறளைப் பயிலுவோம்; வாழ்வில் பின்பற்றுவோம். கடவுள் வாழ்த்து 1) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 2) கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் 3) மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். […]