திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 9 விருந்தோம்பல்

விவசாயத்தை தொழிலாகக் கொண்டதால் விருந்து என்பது தோன்றியது. உயிர் காக்கும் மருந்தாக இருப்பினும், அதை விருந்துடன் பகிர்ந்துகொள்வதே சிறப்பானது. விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஒருபோதும் ஆட்படமாட்டார். வேள்வியைவிட சிறந்த விருந்தோம்பலே மேன்மையானது. 1) இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. 2) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று. 3) வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. 4) அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல். […]