திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 15 பிறன்இல் விழையாமை

அறம் என்றால் என்ன என்பதை அறிந்தவர்கள், அடுத்தவரின் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. பகை, பாவம், பழி, பயமற்றவர் இல்லறத்தார் ஆவார். அவர் அடுத்தவர் குடும்ப வாழ்வு சிதையக் காரணமாக இருக்கமாட்டார். 1. பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். 2. அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். 3. விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல் தீமை புரிந்துதொழுகு வார். 4. எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். 5. எளிதென […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 14 ஓழுக்கமுடைமை

வாழ்தலுக்கான வரைமுறையே ஒழுக்கம். அது வீடுபேறு அடைய உதவும் என்பதால், உயிரைவி மேலானதாகப் போற்ற வேண்டும். ஒழுக்கத்தின் வெளிப்பாடே குடும்பம். நல்லொழுக்கம் என்பதே நன்றியுணர்வுடன் இருப்பது. அதிலும், உலகத்துடன் ஒத்திசையும்படி நடப்பவரே கற்றறிந்தவர். 1. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். 2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம்; தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. 3.ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். 4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும். […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 13 அடக்கம் உடைமை

தெய்வீகமானவர்களுடன் சேர்க்கும் அடக்கத்தை அதன் செறிவு அறிந்து காக்க வேண்டும் அவர் மலையைவிட பெரியவராகக் கருதப்படுவார். வாய்ச்சொல் தவறிவிடாதபடி காப்பதே அவசியம். காரணம், தீ ஏற்படுத்தும் காயத்தைவிட பெரிய காயத்தை அது உண்டாக்கிவிடும். முழுமையாகக் கற்று அறிந்தவர், பணிதலுடன் வாழ்வார். 1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. 3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். 4. நிலையின் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 12 நடுவு நிலைமை

யாரிடமும் பாரபட்சம் பார்க்காமல் இருப்பதே தகுதி. அப்படி வாழ்பவரே நடுவுநிலையாளர். அவரது நடுவுநிலையை அவரது உடல்மொழியே காட்டிவிடும். நல்லவை கெட்டவை நிலைத்தவைழ இல்லை என்று அறிந்தவரே சான்றோர். தன்னைப்போல் பிறரை எண்ணும் தன்மையே அவருக்கு அணிகலனாக அமையும். 1. தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். 2. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 3. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல். 4. தக்கார் தகவிலர் என்பது […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 11 செய்நன்றி அறிதல்

உதவுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் உதவுவதே ஆனந்தம். அது இந்த வானத்தையும், பூமியையும்விட மிகப் பெரியது. பிறர் நமக்கு செய்த துன்பத்தைவிட நன்மை சிறிது செய்திருந்தாலும் அதை எண்ணிப் பார்ப்பதே சிறந்தது. பிறர் செய்த உதவியை மறந்தவர், வாழ்வில் உயர் பெற முடியாது. 1) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 2) காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. 3) பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 9 விருந்தோம்பல்

விவசாயத்தை தொழிலாகக் கொண்டதால் விருந்து என்பது தோன்றியது. உயிர் காக்கும் மருந்தாக இருப்பினும், அதை விருந்துடன் பகிர்ந்துகொள்வதே சிறப்பானது. விருந்தை எதிர்பார்ப்பவர் வறுமைக்கு ஒருபோதும் ஆட்படமாட்டார். வேள்வியைவிட சிறந்த விருந்தோம்பலே மேன்மையானது. 1) இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. 2) விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று. 3) வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. 4) அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல். […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 8 அன்புடைமை

ஒருவர் அன்பானவராக இருந்தால், அவரால் இரக்கத்தை மறைக்க முடியாது. கண்களில் கண்ணிர் வழியும். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் தன் உயிரையும் அடுத்தவற்குத் தரவல்லவராகவும், அடுத்தவருடன் ஒத்திசைவுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள். இன்பமுடனும், அறம் காக்கும் பண்புடனும், உண்மையான உயிர் வாழ்தல் என்ற சிறப்புடனும் இருப்பார்கள். 1) அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். 2) அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 3) அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 7 மக்கட்பேறு

ஒருவர் தனது வாழ்நாளில் பெற வேண்டியது அறிவில் சிறந்த குழந்தைகளே. அது பிறவித் துன்பத்தை துடைக்கவல்லது. நமது பிள்ளை என்றாலும், அதனதன் வினைப்பயன் அதனதனை தொடரும். குழந்தைகள் உண்ட மிச்சம் போன்ற அமிழ்து வேறு இல்லை. அவர்களின் குரல் போன்ற இனிமை எந்த இசையிலும் இல்லை. தன் குழந்தைகளுக்கு நல்வாய்ப்பை எற்படுத்த வேண்டியது தந்தையின் கடமை. தாயும் தன் மகனை சான்றோன் என்பதில் மகிழ்சியடைவாள். குழந்தைகளும் தன் பெற்றோர்க்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும். 1) பெறுமவற்றுள் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 6 வாழ்க்கைத் துணை நலம்

வாழ்தலே எல்லாவற்றிலும் சிறந்தது. அதற்குத் துணையாக இருக்கும் எதிர்பாலினம் சிறப்பாக அமைந்துவிட்டால் வளம் பல கிடைத்துவிடும். ஆனால், நிர்வாகத் திறன் இல்லாதவர் என்றால் ஏற்றம் இருக்காது. வேண்டியபொழுது வரும் மழையைப் போன்றவள் மனைவி. மேலும், தன்னையும் காத்து, தன்னைச் சார்ந்தவரையும் காப்பவளும் அவளே. எனவே, பெற வேண்டியது நல்ல துணையே. அதுவே மங்களம். 1) மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.2) மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கைஎனைமாட்சித்து ஆயினும் இல்.3) இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்இல்லவள் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 5 இல்வாழ்க்கை

உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பொருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு பூண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தோம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல்வாழ்வின் சிறப்புக்கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். எதில் இருந்து கற்பதன் மூலமும், இல்வாழ்வில் இருந்துதான் அதிகமாகக் கற்க முடியும். அறவாழ்வை விடவும் இல்வாழ்வு மேலானது. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம். 1) இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 4 அறன் வலியுறுத்தல்

மனதால் நேர்மையுடன் இருப்பதே அறம். அப்படி அறமுடன் இருப்பவர்க்கு செல்வமும், சிறப்பும் வளரும். அறத்தை மறுப்பவர் வாழ்வில் வீழ்ச்சி உறுதி. அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடும் கோபம், வன் சொல் இவை நான்கும் இல்லாமல் இருப்பதே அறம். அடுத்தவர் மதிக்கப்பட வேண்டும் என்று அறத்தை செய்யாமல், தனக்காகச் செய்ய வேண்டும். அடிமையாக இருப்பது அறமாகாது. அறமே இன்பத்தைத் தரும். 1) சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு 2) அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 3 நீத்தார் பெருமை

போதும் என்ற நிறைவைத் தரும் ஒழுக்கத்துடன் வாழ்ந்து நிறைவடைந்தவர்களை பெருமையைப் பேசுவதுதான் சிறந்தது. இறந்தவர்கள் எல்லாம் நிறைவானவர்கள் என்று எண்ணக்கூடாது. நன்மை – தீமை என்ற இரண்டால் ஆன உலகைப் புரிந்துகொள்ள வேண்டும். புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதே சிறந்தது. அப்பொழுதுதான் மனித ஆற்றல் முற்றிலும் உணரப்பட்டு, இந்திரனைப்போல் வாழலாம். இத்தகைய பண்பு உள்ளவர்களே அரிய செயல்களைச் செய்வார்கள். புலன்கள் புலப்படுத்தும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தால் இந்த உலகை அறிகிறோம். நிறைவானவர்களின் பெருமையைப் […]

திருக்குறள்

திருக்குறள் அதிகாரம் – 2 வான் சிறப்பு

வெட்டவெளியில் இருந்தே உலகம் தோன்றியது, அங்கிருந்தே மழை வருவதால், அதை அமிழ்தம் என்கிறோம். அது பூமியை மதித்துத் துப்பாதவர்களுக்குத் துப்புகிறது. உள்ளிருக்கும் பசிக்கு உணவாகவும், உழவர்களுக்கு உற்ற துணையாகவும் சமயத்தில் புயலாகவும் இருக்கிறது. மழைத்துளி இல்லை என்றால் புல்லும் முளைக்காது. தானம், தவம், பக்தியால் செய்யும் பூசை அனைத்துக்கும் ஆதாரம் மழை. நீர் இல்லை என்றால் உயிர்களால் ஆன பூமி (உலகம்) இல்லை, வெட்டவெளி இல்லை என்றால் உயிர்களுக்கு ஒழுக்கம் இல்லை. 1) வான்நின்று உலகம் வழங்கி […]